SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் டெல்லியை மிஞ்சிய காற்று மாசு கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல்

2019-11-09@ 01:15:23

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் காற்று மாசு, மூச்சுத்திணறல் என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் நகரம் டெல்லிதான். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று மாசு அதிகரித்திருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத அளவுக்கு புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், சென்னையில் காற்று மாசு குறியீடு அதிகபட்சமாக 374 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதுதான். காற்றில் கலந்துள்ள மாசு துகள்களின் அளவு 50க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது தூய்மையான காற்றாக கருதப்படும்.  டெல்லியில் காற்று மாசு 254 என்ற அளவை தாண்டியதால்தான் டெல்லியை கடுமையான காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட நகரம் என்று அறிவித்து, மாசுவை குறைக்க பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில் நேற்று காற்று மாசு குறியீடு அண்ணா நகரில் 374 ஆகவும், ராமாபுரத்தில் 363, கொடுங்கையூர், மணலி ஆகிய இடங்களில் 317, ஆலந்தூரில் 312, கொடுங்கையூரில் 297 ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று காலை மணலியில் 320 ஆகவும், வேளச்சேரியில் 292 ஆகவும், ஆலந்தூரில் 285 ஆகவும் உள்ளது. சென்னையின் சொகுசு பகுதி என்றழைக்கப்படும் அண்ணாநகரில் தான் காற்று மாசு அதிகமாக உள்ளது. டில்லியின் காற்று மாசுவை விட 50% கூடுதலான காற்று மாசு சென்னையில் உள்ளது.
 சென்னையின் புறநகர் பகுதிகளான கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அடிக்கடி அந்த குப்பைக் கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதும் தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.காற்று மாசுவைத் தடுக்க சுற்றுச்சூழல் விதிகளை முறையாக செயல்படுத்தினாலே போதுமானது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்