SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊனமுற்ற குட்டியுடன் தாய் யானை பாச போராட்டம்: வீடுகளை தாக்குவதால் மக்கள் அச்சம்

2019-11-08@ 21:04:42

வால்பாறை: தாய்முடி, ஆனைமுடி, நல்லமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 3 வாரங்களாக 8 மாதமான குட்டி யானையுடன் தாய் யானை ஒன்று உலா வருகிறது. குட்டி யானையின் வலது பின்னங்கால் தடித்து, பருமன் அதிகமாக காணப்படுகிறது. மற்ற கால்கள் அனைத்தும் பலவீனமாக ஒல்லியாக காணப்படுகிறது.

இதனால் குட்டி யானையால் சரியாக நடக்க முடியவில்லை. குட்டி யானையை தும்பிக்கையால் தாய் யானை தூக்கி நிறுத்த முயல்கிறது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. இதனால் குட்டி யானையை விட்டு செல்ல முடியாமல் தாய் யானை தவித்து வருகிறது. கூட்டத்தில் இருந்து பிரிந்து காணப்படும் இந்த தாய் மற்றும் குட்டி யானையின் பாசப்போராட்டம் காண்போர் மனதை கண்கலங்க வைக்கிறது. குட்டி யானைக்கு பிறவி ஊனமா? அல்லது கால் உடைந்து உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.தற்போது தாய்முடி எஸ்டேட் புதுகாடு பகுதியில் தாய் யானையும், குட்டி யானையும் முகாமிட்டுள்ளன. குட்டி யானையால் சரியாக நடமாட முடியாததால் அதனை விட்டுவிட்டு தாய் யானை உணவு உட்கொள்ள வனப்பகுதிக்கு செல்வதில்லை. மற்ற வன விலங்குகள் குட்டியை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் தாய் யானை அதன் அருகிலேயே இருந்து வருகிறது.

இதற்காக குடியிருப்பு பகுதியில் குட்டி யானையை விட்டுவிட்டு அந்த பகுதியிலேயே தாய் யானையும் உணவு தேடி வருகிறது. இதற்காக குடியிருப்புகளை உடைத்தும், சேதப்படுத்தியும் வருகிறது. கடந்த 2 நாட்களில் 6 வீடுகளை யானை ேசதப்படுத்தியுள்ளது. இந்த யானை பொதுமக்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். உணவிற்காக ஏங்கி நிற்கும் குட்டி யானைக்கு பிறவி ஊனமாக இருந்தால் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நோய்வாய்பட்டிருந்தால் மீட்டு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு செய்தால்தான் தாய் யானையும் வனப்பகுதிக்குள் செல்லும். எனவே இது குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்