SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலம் பேணும் தோழி திட்டம் தொடக்கம்

2019-11-08@ 13:14:01

சென்னை: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலம் பேணுவதற்காகவும் அவர்களை மனதளவில் திடப்படுத்துவதற்காகவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் மனதளவில் பாதிக்கப்பட கூடாது, வரும் காலங்களில் அவர்களுக்கும் இந்த சமுதாயத்தில் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக தோழி என்ற ஒரு புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தோழி என்று பெயரிடப்பட்டு அதன்படியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராக எழுப்பப்படும் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்தார்.

இந்த திட்டத்தினை மேற்கொள்ள சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர்கள், ஒரு காவல் நிலையத்திற்கு 2 பேர் என பணி அமர்த்தப்பட்டு இன்றையிலிருந்தே அவர்களுக்கு பிரத்தேகமான வகுப்புகள் மற்றும் பிரத்யேகமான உடையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொடர்பாக வழக்குகள் பதிவாகும் நேரத்தில் அந்த வழக்குகளில் இருந்து குழந்தைகளை எவ்வாறு வெளி கொண்டு வருவது போன்ற வகுப்புகளும் அளிக்கப்பட்டது. இந்த காவலர்கள் பயிற்சியில் எந்தவிதமான நுணுக்கங்கள் கையாளப்பட வேண்டும், குழந்தைகளை எவ்வாறு மனதளவில் திடப்படுத்த வேண்டும் போன்றவைகளும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்