SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரர்களுக்கு நல்ல உதாரணம் கோஹ்லி

2019-11-08@ 00:10:35

சென்னை: ஆஸ்திரேலியாவை  சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் சிமோன் டஃபேல்(48)  தனது வாழ்க்கை  அனுபவங்களை தொகுத்து, ‘‘ஃபில்லிங் கேப்’’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  அதற்கான விற்பனை விழா சென்னையில் உள்ள தனியார் சந்தை மாளிகையில் நேற்று  நடைபெற்றது. டஃபேல்  5முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ‘சிறந்த நடுவர்’  விருதை பெற்றவர். மேலும் 2009ம் ஆண்டு லாகூரில்  பாகிஸ்தான்-இலங்கை  போட்டிக்கு முன்பாக நடைபெற்ற குண்டு வெடிப்பின் போது மயிரிழையில்  தப்பித்தவர்.  குண்டு வெடிப்பில் தப்பியது உட்பட பல்வேறு அனுபவங்களை  புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். டஃபேல் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘  நடுவர் போன்ற பொறுப்பான பணி,  மனநிறைவை மட்டுமல்ல ஏராளமான அனுபவங்களையும்  தந்தது. விமர்சனங்களையும் எதிர்நோக்கினேன்.

சரியான  முடிவுகளை எடுக்க வசதியாக, நல்ல தொழில்நுட்பங்களை கையாள நடுவர்களை ஊக்கவிக்க  வேண்டும். நமது முயற்சிகள், அனுபவங்களுடன் தொழில்நுட்பங்களை  பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும்.வீரராக இருந்தாலும், யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாரை  போன்றும் மாற முயற்சிக்காதீர்கள். ஆனால் அவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு  உங்கள் பாணியை கடைபிடியுங்கள்.அப்படி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள மற்ற வீரர்களுக்கு வீராட் கோஹ்லி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.பகல்  இரவு போட்டியாக டெஸ்ட் போட்டிகளை நடத்துவது, வண்ணப் பந்துகளை  பயன்படுத்துவதில் சவால்கள் இருக்கவே செய்யும். ஆனால் டெஸ்ட் போட்டிகளை,  அதில் விளையாடும் வீரர்களை மக்களிடையே பிரபலபடுத்துவது அவசியம்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2019

    15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்