SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்!

2019-11-07@ 16:54:44

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் முதல் மாசுபாடு முகமூடி வரை அனைத்தையும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது சியோமி நிறுவனம் மி ஆர்கானிக் டி-ஷர்ட்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. சீன நிறுவனமான சியோமி நிறுவனம், 100% ஆர்கானிக் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு டி-ஷர்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆர்கானிக் டி-ஷர்ட்டுகள் இரண்டு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்கானிக் டி-ஷர்ட்கள் உலகளாவிய ஆர்கானிக் டெக்ஸ்டைல் தரநிலைகளால் சான்றளிக்கப்பட்டுள்ளது.  இந்த சியோமி மி டி-ஷர்ட்டின் அதிகாரப்பூர்வ பட்டியலின் படி, நச்சுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத ஆர்கானிக் பருத்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சியோமி மி டி-ஷர்ட்டின் பின்புறத்தில் மற்றும் அதன் ஸ்லீவிலும் ரிஃப்லெக்ட்டிங் மி லோகோக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு டி-ஷர்ட்டிலும் விதையுடன் கூடிய ஒரு பை பொருத்தப்பட்டிருக்கும். இந்த விதைகளை நீங்கள் நேரடியாக மண்ணில் விதைக்கலாம். விதைகள் விதைக்கப்பட்ட சில நாட்களில் பாஸில் செடி வளர ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட் உடன் பருத்தி கோரா பை ஒன்றும் வழங்கப்படுகிறது. ஆர்கானிக் டி-ஷர்ட்கள் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கிறது. இதன் அளவு சிறியது முதல் பெரியது வரை வெறும் ரூ. 499 என்ற விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.'


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்