SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயல் வேகத்தில் ஒரு பயணம்

2019-11-05@ 17:56:15

நன்றி குங்குமம் முத்தாரம்

ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத் துக்கு கால்நடையாகபயணிக்க ஆரம்பித்த மனிதன் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது.குறிப்பாக போக்குவரத்தில் அவன் விண்ணைத் தொட்டுவிட்டான். இருந்தாலும் அவன் இன்னும் திருப்தி யடையவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்துகிடக்கிறான். இப்படி போக்கு வரத்துத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் ஹைப் பர்லூப் போக்குவரத்து.

விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகமாக செல்லக் கூடிய ஒரு போக்குவரத்தாக இது இருக்கும் என்று நம்பப் படுகிறது. இதன் மூலம்  
ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடத்தைக் கூட ஒரு மணி நேரத்துக்குள் அடைந்து விடலாம். ஒரு ராட்சத குழாய்க்குள் சாலை அமைக்கப்பட்டு மின்மோட்டார் கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வாகனங்கள் உந்தித் தள்ளப்படும்.

வழக்கமான போக்குவரத்தில் பயணத்தின்போது ஏற்படும் காற்றுத்தடை மற்றும் எதன் மீதாவது வாகனங்கள் உராய்வதால்தான் வேகம் குறைந்துவிடுகிறது. ஹைப்பர்லூப்பில் காற்றுத் தடை, உராய்வு போன்ற விஷயங்களுக்கே இடமில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஹைப்பர்லூப் போக்குவரத்தைப் பற்றி சிந்தித்திருக்கின்றனர்.

ஆனால், அதற்கான தொழில்நுட்பம், வசதி இல்லாததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த மாதிரியான விஷயங்களில் பேரார்வம் உடைய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் எலன் மஸ்க், 2013-இல் ஹைப்பர்லூப் போக்குவரத்தை தூசி தட்டி எடுத்தார். ராட்சதக் குழாய், அதற்குள் சாலை, ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் என அவர்  சொன்னபோது எல்லோரும் மஸ்க்கை கேலி செய்தனர்.

‘‘இந்தாளுக்கு இதே வேலையாப் போச்சு...’’ என்றனர். இந்நிலையில் ‘வர்ஜின்ஸ் ஹைப்பர்லூப் ஒன்’ நிறு வனம் சவுதி அரேபியாவில் ஹைப்பர்லூப் சாலை அமைக்க அரசிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. புல்லட்  ரயிலை விட பத்து மடங்கு வேகத்தில் வாகனங்கள் இதில் இயக்கப்படும். 76 நிமிடங்களில் ரியாத்தில் இருந்து ஜெட்டா செல்லும். இப்போது இதற்கு 10 மணி நேரம் எடுக்கிறது. கேலி செய்தவர்கள் எல்லாம் இப்போது எலன் மஸ்க்கை  புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PopeFrancisInThailand

  முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்