SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோட்டூர்புரம் ரயில் நிலையத்தின் கோலம

2013-06-29@ 00:12:40

சென்னை : சென்னை கடற்கரை , வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ளது கோட்டூர்புரம் ரயில் நிலையம். 2007ல் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இருந்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் பாழடைந்த கட்டிடம் போல் காட்சியளிக்கிறது. அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. மொத்தம் 4 அடுக்கு கொண்ட இந்த ரயில் நிலையத்தில் தரை தளம் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களுக்கு பதில் குப்பைகள்தான் குவிந்து கிடக்கின்றன. நடைமேடைகள், பாதைகளில் பயணிகள் போட்ட குப்பைகள் தூண்களின் மீது மலைபோல் குவிந்து கிடக்கின்றன.  

பறக்கும் ரயில் நிலைய மார்க்கத்தில் உள்ள மற்ற ரயில் நிலையங்களை விட இங்கு கழிவறைகள் அதிகம். தரைதளம், முதல்தளம், ரயில் நிலைய நடைமேடை பகுதி என எல்லா இடங்களிலும் ஆண், பெண்களுக்கு என தனித்தனியே கழிவறைகள் உள்ளன. ஆனால் பாதி மூடிக்கிடக்க, பாதி பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து கிடக்கின்றன. இந்த கழிவறைகளை நடத்த அனுமதி பெற்றவரின் குத்தகை காலம் 2014 டிசம்பர் மாதம்தான் முடிவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் குழாய்கள் இருக்கின்றன. அவற்றுக்கு பக்கத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று நோட்டீசும் ஒட்டியுள்ளனர். ஆனால் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தரைதளத்தில் இருந்து முதல் தளத்துக்கு செல்ல உதவும் நகரும்படிகள் (எஸ்கலேட்டர்) எப்போது செயல்படும், எப்போது நிறுத்தி வைக்கப்படும் என்று பயணிகளுக்கு தெரியாது. அதே நேரத்தில் தரை தளத்தில் இருந்து முதலாவது, 2வது நடைமேடைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நகரும்படிகள் பழுதடைந்திருக்கின்றன.
2012ம் ஆண்டு அமலுக்கு வந்த கால அட்டவணை அடிப்படையில் ரயில்களின் வருகை, புறப்பாடு நேரங்கள் குறித்த அட்டவணை எங்கும் காணவில்லை. இந்நிலையில் புதிய அட்டவணையும் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது.

ரயில்வே இடங்களில் எச்சில் துப்பினால், அசுத்தம் செய்தால் அபராதம் என்பது நவம்பர் 2012ல் அமலானது. ஆனால் கோட்டூர்புரம் ரயில்நிலையம் எங்கும் பான்பராக் கறைகள், சிகரெட், பீடி துண்டுகள்தான் பரவிக்கிடக்கின்றன. சரியாக பூச்சு வேலைகள் செய்யாதது, பூச்சுவேலையின் போது சிதறிய கலவைகளை சுத்தம் செய்யாதது என்று தரம் குறைந்த கட்டுமான வேலைகளின் அடையாளமாக கோட்டூர்புரம் ரயில் நிலையம் உள்ளது.  மழைக்காலங்களில் ஆங்காங்கே ஒழுகுவதால் சுவர்கள் பாசி படர்ந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகின்றன.

 மின் விளக்குகள் பல பழுதடைந்திருப்பதால் இரவில் நடைமேடைகள் உட்பட ரயில் நிலையம் இருளில் மூழ்கி பயணிகளை அச்சுறுத்தி கொண்டிருக்கின்றது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, Ôகோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் வண்ணப்பூச்சு செய்யும் வேலைகள் நடைபெற உள்ளன. அப்போது ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் வேலையும் நடைபெறும். அதன்பிறகு ரயில் நிலையம் பளிச்சென்றாகி விடும். பயணிகளும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் குப்பையை போடக்கூடாதுÕ என்றனர்.

plavix plavix plavix plm
abortion pill procedures farsettiarte.it having an abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்