SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஸ்பேட்டால் உருவான நௌரு தீவு

2019-10-31@ 12:32:38

உலகின் மூன்றாவது சிறிய நாடு நௌரு. பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் இந்தக் குட்டித்தீவின் பரப்பளவு வெறும் 21 சதுர கிலோ மீட்டர். இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் மாவட்டத்தில் உள்ளது. இங்கே சுமார் 11 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இது வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். 'நவூரு' என்ற சொல் நவூருவ மொழியில் அனாஓரோ, 'நான் கடற்கரைக்குப் போகிறேன்' எனப் பொருள்.

மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இனிமையான தீவு என்றும் நௌருவை அழைக்கின்றனர். பாஸ்பேட்டால் நிறைந்திருக்கும் இந்தத் தீவு பணக்கார நாடாகவும் மிளிர்கிறது. இங்கிருக்கும் பாஸ்பேட் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அத்துடன் இராணுவம் இல்லாத பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலும் நௌரு இடம்பிடித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்