சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.19,656ஆக விற்பனை

Date: 2013-06-26@ 12:41:08

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.552 குறைந்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை 2014ல் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்த பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. அத்துடன் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1248 டாலர் என்ற 3 ஆண்டின் குறைந்தபட்ச விலையில் காணப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவு ஆனாலும் உள்நாட்டில் ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் காணப்படுவதாலும் இந்தியாவில் தங்கம் விலை சரிந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் ரூ.2,457க்கும், ஒரு சவரன் ரூ.19,656க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.30க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.39,560க்கும் விற்கப்படுகிறது.

my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy

Like Us on Facebook Dinkaran Daily News