SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை

2019-10-21@ 20:24:47

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் சாரலுடன் பெய்ய துவங்கிய மழை, நேரம் செல்ல செல்ல அதிகரித்தது விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. மழையால், ரோட்டில் ஆங்காங்கே மழைநீர் ஆறாக ஓடியது. சில  இடங்களில் சாக்கடை நிரம்பி கழிவுகளுடன் மழைநீர் தேங்கியதால், அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர். கோவை ரோடு பகுதியில் காட்டாற்று வெள்ளம்போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இந்திராநகர், செரீப் காலனி, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதுடன். அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. வீட்டில் புகுந்த தண்ணீரை விடிய விடிய வெளியேற்றிய நிலை ஏற்பட்டது. இன்று காலை  நிலவரப்படி அதிகபட்சமாக பொள்ளாச்சியில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ந்து பெய்த மழையால், இன்று அதிகாலை குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் குரங்கு அருவிக்கு இன்று  காலை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பெயத மழையளவு மி.மீட்டரில் வருமாறு: பரம்பிக்குளம் 14, ஆழியார் 62.6, மேல்நீரார் 19, கீழ்நீரார் 42, காடம்பாறை 23, சர்க்கார்பதி 44, வேட்டைக்காரன்புதூர் 41.4, மணக்கடவு 83.4, தூணக்கடவு 10, பெருவாரிபள்ளம் 10,  அப்பர் ஆழியார் 34, நவமலை 19, பொள்ளாச்சி 101, நல்லாறு 96, நெகமம் 47, பெதப்பம்பட்டி 54.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்