SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி அருகே கேத்தி விளை நிலத்தில் மழை நீர் தேங்கி கேரட் பயிர்கள் நாசம்

2019-10-21@ 20:24:20

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி துவங்கியது. ஆனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக, குன்னூர், குந்தா, கோத்தகிரி மற்றும் ஊட்டியில் மழை  பெய்து வருகிறது. இடி மற்றும் மின்னலுடன் பெய்யும் இந்த மழையால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரிய அளவிலான மண் சரிவு, மரங்கள் சாய்வு ஏற்பட்டு வருகிறது. கேத்தி பகுதியில் விவசாய நிலங்கள்  பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது. குறிப்பாக, கேத்தி, கோத்தகிரி, குன்னூர், குந்தா மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால்,  கேத்தி பாலாடா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

அதே போல், இப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது. சில இடங்களில் மரங்கள் விழுந்து  போக்குவரத்து பாதித்தது. மேலும், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலை சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நாள் தோறும்  மழை அதிகமாக பெய்து வரும் நிலையில், அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரியில் இன்று காலை பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டர் அளவில்) : ஊட்டி 45, நடுவட்டம்  19, கல்லட்டி 23, குந்தா 32, கிளன்மார்கன் 29, அவலாஞ்சி 24, எமரால்டு 30, குன்னூர் 15, கெத்தை 15, பர்லியார் 10, கோத்தகிரி 10, கோடநாடு 16.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்