SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் தலைவாசலில் அமையவுள்ள பிரம்மாண்ட கால்நடை பூங்காவிற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவு

2019-10-21@ 17:11:31

சென்னை: சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய நவீன கால்நடைப் பூங்காவிற்கான முன்சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பினை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த கால்நடை பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோட்டில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான சுமார் 900 ஏக்கர் பரப்பில் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இந்த நவீன கால்நடை பூங்காவில் கால்நடை மருத்துவமனை, உணவு பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தும் கூடம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கலப்பின காளைகளை கொண்டு 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த நவீன கால்நடை பூங்காவிற்கான முன்சாத்திய கூறுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நபார்டு கன்சல்டன்சி நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பதோடு மட்டுமின்றி அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்