SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

TikTok செயலியில் அறிமுகமாகும் புதிய திட்டம்!

2019-10-21@ 15:30:02

TikTok  செயலி சார்பில் கல்வி சார்ந்த புதிய திட்டம் Edutok என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்பட்டு வந்த டிக்டாக் செயலி இனி அறிவுசார்ந்த செயல்பாட்டுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்று அதன் தலைமை செயல் இயக்குநர் நிதின் சலுஜா தெரிவித்துள்ளார்.டிக்டாக் செயலி மூலம் கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் எஜூடோக் (Edutok) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும்.புதிய திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 4800 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.மேலும் இவை 180 கோடிக்கும் அதிக முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.Edutok திட்டத்தின் கீழ் TikTok  நிறுவனம் ஜோஷ் டாக்ஸ் மற்றும் தி ஃ நட்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. இதன் மூலம் TikTok பயனர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உருவாக்கப்படும் உயர் ரக கல்வி சார்ந்த தகவல்களை முதல்முறை TikTok  பயனர்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இத்துடன் TikTok  நிறுவனம் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான டாப்பர், மேட் ஈசி மற்றும் கிரேடு அப் போன்றவற்றுடன் இணைந்து பாடங்கள் தொடர்பான தரவுகளை செயலியில் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் செயலியிலேயே பயனர்கள் கல்வி சார்ந்த பல்வேறு தகவல்களை வெவ்வேறு பிரிவுகள் மற்றும் மொழிகளில் பெற முடியும்.பயனர்கள் புதிய #Edutok அனுபவத்தை TikTok செயலியில் பெற முடியும். TikTok செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்