SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் அதிக விஷத்தன்மை கொண்ட நீலத் தவளை

2019-10-21@ 14:56:02

நன்றி குங்குமம் முத்தாரம்

சுமார் 265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் தவளை. பூமியில் 4,800 வகையான தவளை இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.இதில் 85 சதவீத தவளை இனங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை.காட்டிலுள்ள பூச்சிகளை உண்டு வாழும் தவளைகள், பாம்புக்கு உணவாகப் பயன் படுவதால் உணவுச்சங்கிலியில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் தவளை இனங்கள் அதிவேகமாக அழிந்து வருகின்றன. 1950-களுக்குப் பிறகு மூன்றில் ஒரு பகுதி தவளை இனங்கள் அழிந்து விட்டன.

தென் அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகளிலும், குறிப்பாக பனாமாவிலும் அதிகமாக வாழக்கூடியவை நீலத் தவளை. ‘டென்ட்ரோ பேட்ஸ் டிங்டோரியஸ்’ என்ற உயிரியல் பெயரில் அழைக்கப்படும் இவை 5 முதல் 7 செ.மீ நீளம் உடையவை. அதிகபட்சமாக இதன் எடை 70 கிராம். ஆனால், 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.இதில் 200 வகையான இனங்கள் உள்ளன. சிவப்பு மட்டுமல்லாமல் பச்சை, நீலம், மஞ்சள் என பல வண்ணங்களில் காட்சியளிக்கும் இந்தத் தவளைகள் குளவி, எறும்பு, பூச்சி, வண்டுகளை உணவாக உட்கொள்கின்றன. பார்ப்பதற்கு மனதைக் கவரும் அழகுடையவை என்றாலும் கொடிய விஷத் தவளைகள் இவை. உலகின் அதிக விஷத்தன்மை கொண்ட உயிரினமாக இந்தத் தவளையைச் சொல்கின்றனர்.

ஒரு தவளையின் உடம்பிலிருக்கும் விஷத்தை எடுத்து 20 ஆயிரம் எலிகளைக் கொல்ல முடியுமாம். தவளையின் முதுகுப் பகுதியில் பிசின்போல விஷம் சுரக்கிறது. அந்த விஷம், சயனைடை விட அதிக திறனைக் கொண்டது. அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இந்த விஷத்தை அம்புகளில் தடவி விலங்குகளை வேட்டையாடினார்கள். ஆனால், சிவப்புத் தவளை விஷத்தை எதற்கும் பயன்படுத் துவதில்லை என்பது இதில் ஹைலைட்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2019

    20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indiraganthipics

    இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்