SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏறுமுகத்தில் தங்கம் விலை : சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,328க்கு விற்பனை

2019-10-19@ 11:23:06

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,328க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து  ரூ.3,666 க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை ஒரு கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ.49.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்து நிலவி வருகிறது.

 கண்ணாமூச்சி ஆடும் தங்கத்தின் விலை

இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,328க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து, ரூ.3,666க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.49.20க்கும், கிலோ ரூ.49,200க்கும் விற்பனையாகி வந்தது . கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-11-2019

    12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • americaship

    ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

  • traincrashtelungana

    தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

  • humanfacefish

    மனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

  • berlinwall

    ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்