தொழிலாளர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்
2019-10-19@ 00:02:38

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார்
வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற
இடைத்தேர்தலில் தொகுதி வாக்காளர்கள் குறிப்பாக தொழிலாளர்கள் திமுக மற்றும்
காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு வாக்களித்திட வேண்டும். அது தான்
தமிழகத்தின் எதிர் கால விடிவிற்கு ஓர் அச்சாரமாக அமைந்திடும்.
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்கள் பெரும்பாலானோர் கட்டுமான
தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள்
ஆவார். இவர்களுக்காக திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட 17
நலவாரியங்கள் தற்போது முறையாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் அடியோடு முடங்கியுள்ளதால் லட்சகணக்கான
தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
மத்தியில் ஆட்சியில்
உள்ள மோடி அரசு தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகிறது. இப்படி மத்திய மோடி அரசும், மாநில எடப்பாடி அரசும்
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இப்படி
தொழிலாளர்களை வஞ்சிக்கும் மாநில எடப்பாடி அரசுக்கும் அதற்கு துணை போகும்
மத்திய மோடி அரசுக்கும் பாடம் புகட்டிடவும்; இந்நிலை மாறிட எதிர் வரும்
சட்டமன்ற பொதுத் தேர்தலின் வெற்றிக்கான ஓர் அச்சாரமாக விளங்கிட
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ்
வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தமிழக அரசியலில் கூட்டணி என்பது அவசியம்: ஜி.கே.வாசன் பேச்சு
சொல்லிட்டாங்க...
குடியுரிமை மசோதாவை அனைவரும் ஏற்கும் காலம் வரும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி
மதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் பாஜவுக்கு மக்கள் மரணஅடி கொடுப்பார்கள்: தலைவர்கள் கடும் கண்டனம்
பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஊரக வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்காததால் ஊதியம் கிடைக்காமல் பயனாளிகள் தவிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு