பி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மும்பை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்!
2019-10-18@ 12:06:30

புதுடெல்லி : ரூ.4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பை சயான் கோலிவாடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.4355 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதனால் வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது. வங்கியில் பணம் போட்டவர்கள் தினமும் போராடி வருகின்றனர். சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை வந்தபோது அவரையும் முற்றுகையிட்டனர். இந்த வங்கியில் ரூ.2500 கோடி அளவுக்கு எச்.டி.ஐ.எல். நிறுவனம் கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்கவில்லை. இந்த கடன் திரும்ப வராததால்தான் வங்கியின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், எச்.டி.ஐ.எல். நிறுவன உரிமையாளர் ராகேஷ் வாத்வான், சரங் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரி, பிஜோன் மிஷ்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் மும்பை நீதிமன்றத்தை நாடவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவால் பி.எம்.சி வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அசாம் மாநிலத்திற்கு மாற்றம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் பெரும் போராட்டம்: வன்முறை வெடித்துள்ளதால் ராணுவ வீரர்கள் குவிப்பு
மாமனார், மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை: புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்: மக்களவையில் தி.மு.க எம்பி கனிமொழி பேச்சு
தெற்காசியாவிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாகக் குறையும்: ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி..இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி: இஸ்ரோ தலைவர் சிவன்
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்
முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்
சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்