SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 35,000 கன அடியாக உயர்வு

2019-10-18@ 11:02:07

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 8,347 அடியாக இருந்த நிலையில், காலை நிலவரப்படி 34,722 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 114.83 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.80 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.46 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் அதிகரித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்த்துப் போனதால் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

 தென்மேற்கு பருவமழை பெய்தபின் இந்த தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைந்தது. வழக்கத்தைவிட தென்மேற்கு பருவகாற்று அதிக நாள் நீடிக்க அதனால் தமிழ்நாட்டிலும்கூட பல இடங்களில் மழைபெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையும் தொடர்ந்து நிரம்பியது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை 16ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைப் போல் ஏமாற்றாமல் இயல்பான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துவருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. தொடர்ந்து இது அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தாலும் பல மாவட்டங்கள் தங்கள் குடிநீர், விவசாய தேவைகளுக்கு காவிரி ஆற்றை நம்பியே உள்ளன. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்