SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஜி மத்திய மந்திரியை மதிச்சு யாரும் வராததால நிகழ்ச்சி ரத்தான விஷயத்தை சொல்கிறார் : wiki யானந்தா

2019-10-17@ 00:16:28

‘‘பணி நேரத்தில் வேலையை பார்க்காமல் திடீரென மாயமாகி விடுகிறாராமே ஒரு சிறைக்காவலர்’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஓ..அந்த விஷயத்தை கேக்கிறயா... வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 350க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் பாதுகாப்பு பணியில் ஆண், பெண் காவலர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் காவலராக பணியாற்றி வரும் அலைகள் ஓய்வதில்லை படத்தின் நாயகனின் பெயர் கொண்டவர், சிறையில் பணியாற்றும் திருமணமான பெண் காவலரிடம், பணி நேரத்தில் சிறைக்குள் அலுவலக தொலைபேசி எண்ணில் இருந்தும், செல்போன் மூலமும் பேசிக்கொண்டிருக்கிறாராம். அதோடு அந்த பெண் காவலருடன் ஊர் சுற்றிவருகிறாராம். இதுபோல் பணி நேரத்தில் திடீரென மாயமாகி விடுகிறாராம் அந்த காவலர். இதுகுறித்து சிறையில் பணியாற்றும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க போனால், மேல் அதிகாரிகளுக்கு தேவையான வேலை செய்து, நல்லவர் போல் நாடகமாடி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாங்குநேரி நிலவரம் என்ன..’’‘‘இங்க தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள காரியாலயத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையப்போவதாக ஊடகங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஊடகவியலாளர்கள் நாங்குநேரி டோல்கேட் அருகிலுள்ள அதிமுக தலைமை காரியாலயத்தில் குவிந்தனர். அங்கு அப்போது பாஜ நிர்வாகிகள் உள்பட சுமார் 25க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். வேறு மாற்றுக்கட்சியினர் யாரும் அங்கில்லை. இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் பாஜ நிர்வாகியிடம் எதற்காக நீங்கள் கட்சி மாறுகிறீர்கள் என கேட்டதும் அந்த நிர்வாகி அதிர்ச்சியில் உறைந்து போனார். நாங்கள் கட்சி மாற இங்கு வரவில்லை, எங்களது தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் கூட்டணி ஆலோசனைக்காக இங்கு வர இருப்பதால் அவரை வரவேற்க நாங்கள் வந்துள்ளோம் என்றார்.

அதற்கு செய்தியாளர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் வரும் தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மாற்று கட்சியினர் அதிமுகவில் சேரப்போவதாக மட்டுமே தகவல் தரப்பட்டது. அதனடிப்படையில்தான் உங்களிடம் விசாரித்தோம் என்றனர். உடனே அந்த நிர்வாகியின் அருகில் இருந்த தொண்டர் ஒருவர் இதுக்குத்தான் முன் கூட்டியே போய் காத்திருக்க வேண்டாம்னு சொன்னேன். கேட்டீங்களா என்று செல்லமாக கண்டித்தார். மேலும் அதிமுக கூட்டணி கட்சிகள் ெதாடர்பாக சரியான தகவல்களை ஊடகத்திற்கு தெரிவிப்பதில்லை என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணனை வரவேற்க அதிமுக தரப்பில் யாரும் முன் வரவில்லையாம். இதனால் அவர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சென்று விட்டதாக கூறினார். இதனால் அங்கு ஒரே சிரிப்பலை எழுந்தது’’ என்றார் விக்கியானந்தா. ‘நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் குமரி மாவட்ட அதிமுகவினர் முகாமிட்டு இருக்காங்காங்களாமே..’’

‘‘ம்ம்... இப்படி தேர்தல் பிரசாரத்துக்கு போன நிர்வாகிகள் சிலரை, குமரி மாவட்ட அதிமுக முக்கிய புள்ளி கடுமையாக ஆபாசமாக திட்டியதால், பிரசாரத்துக்காக போனவர்கள் மீண்டும் திரும்பி ஊருக்கே வந்து விட்டார்களாம். சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூர் அதிமுக செயலாளராக உள்ள வீரபத்ர பிள்ளை என்பவரை, முக்கிய புள்ளி ஆபாசமாக திட்டி இருக்கிறார். இதை கேட்டு, வீரபத்திர பிள்ளை மயங்கி விழுந்து விட்டாராம். அவரை சக கட்சிக்காரர்கள் மீட்டு ஏர்வாடி மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். மயங்கி விழுந்த வீரபத்ர பிள்ளை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தின் தீவிர விசுவாசியாம். மாவட்ட முக்கிய புள்ளி திட்டியது குறித்து, அவர் தளவாய்சுந்தரத்தின் கவனத்துக்கு ெகாண்டு செல்ல, நான் என்னப்பா செய்ய என்று அவரும் எதுவும் பேசாமல் மவுனமாகி விட்டாராம். இப்படியே மாவட்ட முக்கிய புள்ளி திட்டிக் ெகாண்டே இருந்தால், கடைசியில் கட்சிக்காரங்க யாரும் இருக்க மாட்டாங்க. உள்ளாட்சி தேர்தலிலும் நமக்கு நாமம் தான் கிடைக்கும் பாருங்க என்று தளவாய்சுந்தரத்திடம் அவரது ஆதரவாளர்கள் ஆணித்தரமாக கூறி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தமாகா தலைவர் டெல்லிக்கு போகப் போறாராமே.. என்ன விஷயம்..’’ என ஆவலோடு கேட்டார் பீட்டர் மாமா.‘‘சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க அதிமுக கூட்டணியில் இருக்கும் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் சென்றிருந்தாராம்.... முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவராக சால்வை அணிவித்து மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது ஜி.கே.வாசனிடம் மட்டும் மோடி சில நொடிகள் பேசினார். அழைப்பு விடுத்தால் தான் என்னை சந்திக்க வருவீர்களா என்று ஜி.கே.வாசனிடம் மோடி கேட்டாராம்... இந்த விவகாரம் தான் தமாகாவினர் மத்தியில் பரபரப்பா பேசப்படுதாம். மோடி அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லி சென்று அவரை சந்திக்க ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... இவர்களது சந்திப்பு மரியாதை நிமித்தமாக இருக்குமா அல்லது ஏதாவது பேச்சுவார்த்தைக்கான சந்திப்பாக இருக்குமா என்பது தான் இப்போது தமாகாவினர் மத்தியில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்