SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் டொயோட்டா மிராய்

2019-10-16@ 17:34:36

உலகம் முழுவதும் எரிபொருளுக்கு மாற்று தொழிற்நுட்ப வாகனங்களை தயாரிக்க பல நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லாவை எதிர்கொள்ள புதிய தொழிற்நுட்ப காரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம், ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் தனது மிராய் காரின் புதிய படைப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 2014ம் ஆண்டு அறிமுகம் செய்தது முதல் இதுவரை 10 ஆயிரம் மிராய் கார்களை டெயோட்டா விற்பனை செய்துள்ளது. தற்போது அதில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அழுத்தப்பட்ட ஹைட்ரஜன் வாயு ஆக்சிஜனுடன் இணைந்த சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பேட்டரியில் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் தண்ணீர் மட்டுமே வெளியேறும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. புதிய காரில் கூடுதல் ஹைட்ரஜனை சேமிக்கும் வகையில் எரிபொருள் கலன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் 30 சதவீதம் கூடுதல் தூரம் பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 502 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். அக்டோபர் 24ம் தேதி டொக்கியோ மோட்டர் ஷோ நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக இந்த புது மாடலை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்