SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடிதாக்கி 6 பேர் பலி: குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

2019-10-16@ 14:01:43

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சில பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்தது. புதுக்கோட்டை அருகே உள்ள வைத்தூர் மற்றும் தொழுதாம்பட்டி சேர்ந்த 25 பெண்கள்  கீழமுத்துக்காடு பகுதியில் ஒரு வயலில் கடலை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை நேரத்தில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. அதையும் பொருட்படுத்தாமல் கடலை எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். அப்போது மலையுடன்  மலை மோதுவது போல் பயங்கர இடி சத்தம் கேட்டது. பயந்துபோன பெண்கள் கடலை எடுப்பதை நிறுத்திவிட்டு, வீட்டுக்கு புறப்பட தயாரானார்கள்.

அதற்குள் மின்னல் அந்த பகுதியில் சுமார் ஒரு கி.மீட்டர் தூரம் கண்ணை கூசும் அளவிற்கு வந்தது. சற்று நேரத்தில் எத்திராஜ் மனைவி சாந்தி (35), ஆறுமுகம் மனைவி விஜயா (47) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர்.  மேலும் 20 பெண்கள் படுகாயமடைந்தனர். இதனைபார்த்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த 20 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் லெட்சுமணன்  மனைவி லெட்சுமி அம்மாள் (65), ராஜேந்திரன் மனைவி கலைசெல்வி (45) ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, எஸ்பி செல்வராஜ் ஆகியோர் மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட  ஆட்சியர் உமா மகேஷ்வரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களில் இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடுத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த 6 பேர் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்  நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2019

    20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indiraganthipics

    இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்