SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரின் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

2019-10-16@ 11:02:02

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.துப்பாக்கிச் சண்டையில் நசீர் சத்ரு தலைமையிலான பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.  அனந்த்நாக் மாவட்டத்தின் பாசல்பூரா (Pazalpora) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, அம்மாவட்ட காவல்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சற்றும் தாமதிக்காமல், பாதுகாப்புப் படையினர், கடுமையான பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்தது. நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில்,  பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவரும்  ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் நசீர் சத்ரும் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற தீவிரவாதிகள் 2 பேரும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபர்களாகச் செயல்பட்டு வந்தவர்கள் ஆவர் என்றும், மேலும் அப்பகுதியில் தொடர் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். முன்னதாக காஷ்மீரில் கந்தர்பால் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்