SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பொதுக்குழு நடப்பது ஏன் என்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2019-10-16@ 00:06:14

‘‘இடைத்தேர்தலில் தேனிக்காரரின் கெத்து குறைந்தும்... சேலம்காரரின் கெத்து நவீனமாகவும் மாறி இருக்கிறது போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம்... தேர்தல் பிரசாரங்களில் சேலம்காரரின் பிரசாரம் எல்லாம் காமெடி ஷோ, பாட்டு ேபாட்டிகளில் மேடையில் பாடும்போது நவீன மைக் மூலம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேனிகாரர் வழக்கம்போல மைக்கை பிடித்து  பிரசாரம் செய்து வருகிறார். ஆனாலும் சேலம்காரருக்கு ேதர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை எடுத்து தரும் சிலர் தப்புதப்பாக தர்றாங்களாம். அதனால எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம தவிக்கிறாராம். தேனிகாரர்  வழக்கம்போல சிம்பிளாக பேசிவிட்டு போய்விடுகிறாராம். சேலம்காரர் வரும்போது எங்கிருந்தோ பஸ், வேன்களில் அழைத்துவந்து ஒரு கூட்டம் கூட்டப்படுகிறதாம். ஆனால் தேனிகாரர் அதை பற்றி கவலைப்படவில்லையாம்...’’ என்றார்  விக்கியானந்தா.‘‘இலை கட்சியின் பொதுக்குழு எப்போதாம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அனேகமாக டிசம்பர் மாதம் கடைசியில் இருக்கும்னு சொல்றாங்க... அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்படி அட்டவணைகள் தயாரிக்க இலையின் மேலிடம் அதிகாரிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்து இருக்காம். அதை அப்படியே  தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி பொதுக்குழுவை கூட்டுவது குறித்து கால நீட்டிப்பை கேட்பதுதான் இலையின் தற்போது திட்டமாம். அதற்கான செயல்வடிவமும் கொடுத்தாகிவிட்டதாம். அதனால முதலில் உள்ளாட்சி தேர்தல்.. பிறகு பொதுக்குழு  நடக்கும் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு ஓடுது.... உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பொதுக்குழுவை கூட்டினால் பல்வேறு பிரச்னைகள் வரும் என்பதால் இந்த ஏற்பாடாம். அப்புறம், உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ, முன்னாள்  எம்பி, முன்னாள் அமைச்சர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், ஜாதி பலம் உள்ளவர்களை நிறுத்த இலை தலைமை முடிவு செய்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்புறம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் என்பதால் மத்திய அரசும், தேசிய தேர்தல் ஆணையமும் இந்த தேர்தலை வேடிக்கைதான் பார்க்கும். பாதுகாப்பும் உள்ளூர் போலீஸ்தானாம். அதனால உள்ளாட்சி தேர்தலில் ரத, கஜ, படையை  திரட்டி ஒரு கை பார்க்க இலை கட்சி நிர்வாகிகளுக்கு சிக்னல் கொடுத்துவிட்டதாம். அவர்களுக்கு ஆதரவான அதிகாரிகள், போலீஸ் என யாரை எந்த இடத்துக்கு போடலாம் என்ற பட்டியல் தயாராகி வருதாம். அனேகமாக இடைத்தேர்தல் நடந்து  முடிந்ததும்... மிகப்பெரிய டிரான்ஸ்பர் இருக்குமாம். குறிப்பாக மாநகராட்சி பகுதிகள்... இலை வலிமையாக உள்ள பகுதிகளில் இந்த டிரான்ஸ்பர் கட்டாயம் இருக்கும் என்று இலைகட்சியின் முக்கிய தலைவர்கள் பேசிக் கொண்டதாக நிர்வாகிகள்  இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் பேசிக் கொண்டனர். இதனால் உள்ளாட்சி தேர்தலில் நம்மை இலை கட்சி தலைமைேய ஜெயிக்க வைக்கும் என்பதால் அக்கட்சியினர் போட்டியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்...’’ என்றார்  விக்கியானந்தா. ‘தேர்தலில் போட்டியே கிடையாது... அப்டி இருக்கும்போது பிரசாரம் எப்டி செய்ய முடியும்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஏன் முடியாது. ஓட்டு போடாதீங்க என்று ரகசியமாக வீடு வீடாக சென்று செய்யலாமே... இந்த நிலையில்தான் இடைத்தேர்தலில் போட்டியிடாத ஒரு கட்சி ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. அது  இலை கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, நெல்லை மாவட்டத்தில் கிப்ட் தரப்பு படு ஸ்டாரங்காக இருந்தது. ஆனால் மக்களவை தேர்தல் தோல்வியால் அந்த கட்சி கலகலத்து போனது. இதனால் கிப்ட் தரப்பில் இருந்து பலரும்  ஓட்டம் பிடித்து இலை கட்சியில் ஐக்கியமாகி விட்டனர். கிப்ட் தரப்பும் நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தல் அரசியல் வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டது. ஆனால் ஆளுங்கட்சிக்கு வாழ்வா...சாவா என்ற இந்த இடைத்தேர்தலில்  நாங்குநேரியில் ஆளுங்கட்சியை எப்படியாவது மண்ணை கவ்வச் செய்ய வேண்டும் என கிப்ட் தரப்பு திட்டம் போட்டதாம். இதனால் அமமுக போட்டியில்லை என்றாலும் பழைய பாசத்தில் அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டு விடாதீர்கள். எல்லா  ஓட்டையும் நோட்டாவிற்கு மாற்றி விடுங்கள் என கிப்ட் தரப்பு ரகசிய சிக்னல் கொடுத்துள்ளதாம். நாங்குநேரியில் கிப்ட் கட்சிக்கு கணிசமாக வாக்கு உள்ளது.

இடைத்தேர்தலில் பணத்தை கொடுத்து சாதித்து விடலாம் என இலை தரப்பு கனவு கண்டிருந்த நிலையில் கிப்ட்காரரின் புதிய மூவ் இலை தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம். இது தொடர்பாக உளவுத் துறையினர் ரகசிய தகவலை திரட்டி  வருகின்றனராம்... ரகசிய பிரசாரம் செய்பவர்களை கரன்சி மூலம் மடக்குவது அல்லது அவர்களை ஏதாவது சொல்லி சிறையில் தள்ளுவது என்ற திட்டத்துடன் தேர்தல் நெருக்கத்தில் நடவடிக்கை எடுக்க இலை கட்சி முடிவு செய்துள்ளதாம்...’  என்றார் விக்கியானந்தா. ‘‘பலாத்கார விவகாரத்துல அரசியல் புள்ளிக்கு குறி வைச்சிருக்காங்களாமே, அப்டியா...’’ ்என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்ட ஆட்ேடா டிரைவர் பலாத்கார விவகாரத்துல பலருக்கும் தொடர்பு இருக்குறது போலீசுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காம். ஆரம்பத்துல ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது பண்ணின போலீசார், ஒரு வாரம்  கஸ்டடி எடுத்து விசாரிச்சுட்டு வர்றாங்க. விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள குறிவச்சு பணம் குடுத்ததும், திரும்பி கொடுக்க முடியாதவங்கள தனது வலையில வீழ்த்தி, மிரட்டி பலாத்காரம் செய்ததுன்னு, ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு தகவலு வெளியாகிட்டு இருக்கு. அந்த வரிசையில உள்ளூர் அரசியல் கட்சி புள்ளிக்கும், இதுல தொடர்பு இருக்குறது போலீசுக்கு ெதரிய வந்திருக்கு. ஆட்டோ டிரைவர் அடிக்கடி அவருக்கிட்ட பேசுனதையும், அவருக்கு 'தேவையானத'  எல்லாம் உடனே செஞ்சு கொடுத்ததையும் போலீசு கண்டுபிடிச்சிருக்காங்க. அதுக்கான ஆதராமும் சிக்கிருச்சின்னு சொல்றாங்க. இதனால, பாலத்கார விவகாரத்துல அரசியல் புள்ளியும் சீக்கிரமே சிக்குவாருனு பேசிக்கிறாங்களாம்...’’ என்றார்  விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்