சவரன் ரூ.29,376-க்கு விற்பனை: பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் வாங்குவதில் தேக்கம் தொடரும்: உலக தங்க கவுன்சில் அறிக்கை
2019-10-15@ 12:13:27

லண்டன்: நடப்பாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தங்கம் விலையில் ஏற்படும், ஏற்றம், இறக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் வாங்குவதில் தேக்க நிலை தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 750 முதல் 800 ரன் அளவிற்கு இருக்கும் என உலக தங்க கவுன்சில் ஏற்கனவே கணித்திருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 761 ரன் அளவிற்கு தங்கம் வாங்கப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26,000 ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27,000, 28,000, 29,000 என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது.
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் வரும் பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலையும் அதிகரித்துள்ளது. ஆனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக தங்க விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 40 டன் தங்கம் விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு 50 சதவீத விற்பனை குறையும் என இந்திய தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
வர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு
நித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு
அமெரிக்க கடற்படை தளத்தில் கப்பல் மாலுமி திடீர் தாக்குதல்: இந்திய விமான படை தளபதி தப்பினார்
டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்
பார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு
வங்கி மோசடி வழக்கு: வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை ஜனவரி 2ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்
தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து