பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
2019-10-15@ 02:53:16

கடவூர்: கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கன்னிமார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (43). விவசாய கூலி தொழிலாளி. இவர், பட்டா பெயர் மாற்றம் மற்றும் வாரிசு சான்றிதழுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் காளியப்பனை அணுகினார். அவர் ரூ.15ஆயிரம் லஞ்சம் கேட்டபோது, பொன்னுச்சாமி ரூ.9 ஆயிரம் தர சம்மதித்துள்ளார். பின்னர் இதுபற்றி அவர், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் பொன்னுச்சாமி நேற்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், விஏஓ காளியப்பனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சூலூர் அருகே துணிகரம்: திருமண வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் மொய்ப்பணம் கொள்ளை
கவரிங் நகை கொடுத்து மோதிரம் வாங்கிய பெண் கைது
ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
துணிக்கடை அதிபர் வீட்டில் 1.8 லட்சம், நகை திருடிய வேலைக்கார பெண் கைது
மணலி, கொடுங்கையூரில் பெண்களிடம் செயின் பறிப்பு: மதுரை ஆசாமி கைது
போக்சோவில் வாலிபர் கைது
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்
முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்
சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்