SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்

2019-10-14@ 00:21:19

சேலம்: சேலம் வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு  25 நாட்களுக்கு முன்பே வட மாநில ெவள்ளி வியாபாரிகள், தமிழக வெள்ளி வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு பிறகு, அடுத்தடுத்து முகூர்த்தம் வருவதால், வெள்ளிப்பொருட்களின் தேவை  அதிகரித்துள்ளது. வெள்ளிப்பொருட்களில் கா ல்கொலுசுக்கு தான் ஆர்டர் அதிகளவில் வந்துள்ளது. இதையொட்டி வெள்ளிப்பட்டறைகள் வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளோம்.

 கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 40 ஆயிரத்திற்கு விற்றது. விலை படிப்படியாக அதிகரித்து, நேற்று நிலவரப்படி கிலோ 45 ஆயிரத்து 200க்கு விற்றது. தீபாவளியை முன்னிட்டு சுமார் 50 டன் அளவுக்கு வெள்ளிப்பொருட்கள் ஆர்டர்  வந்துள்ளது. அடிக்கடி ஏறி, இறங்கும் விலையில் வெள்ளி வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான விலை இருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்