SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்

2019-10-14@ 00:21:18

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தின் முதல் 2 வாரங்களிலேயே இந்திய பங்குச்சந்தையில் இருந்து 6,217 கோடி முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்  பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். பொருளாதார மந்தநிலை, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் பெரும்பான்மை முதலீடுகளை வாபஸ் பெற்றனர். குறிப்பாக, மத்திய அரசு வரி சீரமைப்புகளை  அறிவித்த பிறகு, கடந்த மாதத்தில் அதிக முதலீடுகள் வெளியேற்றப்பட்டன.

 இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஸ்திரமற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாகவும், அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா அல்லது நீடிக்குமா என்ற குழப்பத்தாலும் இந்த மாதமும் இந்திய  பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர்.  இதன்படி, கடந்த 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை நிகர முதலீடு ₹6,217.1 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். இதில் பங்குச்சந்தையில் இருந்து ₹4,955.2 கோடி மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து விலக்கிய 1,261.9 கோடி அடங்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்