SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

2019-10-12@ 07:45:21

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 4 நாட்களுக்கு பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.  பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். முன்னதாக நேற்று காலை 11.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரை தொடர்ந்து சீன அதிபர் ஜின் பிங் தனி விமானம் மூலம் சரியாக நேற்று மதியம் 2 மணிக்கு சென்னை வந்தார்.

அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திற்குள் தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை, கரகம், பரதம், மேளதாளம் போன்றவை அரங்கேற்றம் செய்து காட்டப்பட்டது.

இதை சீன அதிபர் ஜின்பிங் ஒவ்வொன்றாக நின்று ரசித்து பார்த்து பாராட்டியபடி சென்றார். பின்னர் மாலை 4.05 மணிக்கு கிண்டி ஓட்டலில் இருந்து காரில் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார். மாலை 5.03 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு சிற்பம் அருகே காரில் வந்து இறங்கினார். காரில் வந்து இறங்கிய சீன அதிபரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடந்து சென்றபடி அர்ஜுனன் தபசு சிற்பத்தை பார்த்து ரசித்தனர். அங்குள்ள சிற்பங்களின் வரலாற்றை பிரதமர் மோடியே சீன அதிபருக்கு விளக்கினார். சீன அதிபரும் அங்குள்ள கலை சிற்பங்களை ரசித்து பார்த்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-11-2019

    12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • americaship

    ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

  • traincrashtelungana

    தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

  • humanfacefish

    மனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

  • berlinwall

    ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்