SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையின் காவலை நீட்டித்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

2019-10-10@ 15:28:10

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையின் காவலை நீட்டித்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக இருந்தவர் வெங்கடேசன். இவரது மகன், உதித் சூர்யா. இவர், ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதி, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த தகவல் வெளியானதும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த பிரிவின் டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி உதித் சூர்யா, வெங்கடேசன் ஆகியோரை கடந்த 25ம் தேதி கீழ் திருப்பதி அடிவாரத்தில் கைது செய்தனர்.

கைது செய்த பின் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரையும் சிபிசிஐடி போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அதன்பின், தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அவர்களை சிபிசிஐடி போலீசார் கொண்டு வந்தனர். விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் 26ம் தேதி உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை மதுரை மத்திய சிறையில் இருந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டித்து, வரும் அக்டோபர் 24ம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்