SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அதிகாலையில் ரயில் விட வேண்டும்

2019-10-10@ 14:55:23

*உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

திருவாரூர் : தமிழகத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாக திருச்சி விளங்கி வருகிறது. கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகள் குறிப்பாக நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளிலிருந்து ஆடைகள் வாங்குவதற்கோ, மருத்துவ மேல் சிகிச்சைக்காகவோ, பாஸ்போர்ட் மற்றும் பல்கலைகழகம், கல்லூரிகள், விமான நிலையம், முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்களுடைய எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

திருவாரூர் நகரில் புதிய பேருந்து நிலையம் சென்றுதான் பஸ் ஏறி திருச்சி செல்ல வேண்டும் என்பதால் மக்கள் ரயில் பயணத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். ஏனெனில் நகரின் மையத்தில் ரயில்நிலையம் அமைந்துள்ளது. தற்போது காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பயணிகள் ரயில்தான் முதல் ரயிலாக உள்ளது. இந்த ரயில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறது. அநேக நாட்கள் இந்த ரயில் மதியம் 12.30 மணியை கடந்துதான் திருச்சிக்கு செல்கிறது. திருச்சியில் இருந்து மாலை 4.30க்கு காரைக்கால் செல்லும் ரயில் உள்ளது.

இடைப்பட்ட நேரத்தில் மக்களால் எதையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நோய்வாய்ப்பட்டவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் போன்றவர்களுக்கு ரயில் பயணம்தான் ஏற்றதாக உள்ளது. முக்கிய காரணம் கழிவறை வசதி. தவிர இன்றைய சூழலில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவும் ஒரு காரணமாகும். இதை கருத்தில் கொண்டு அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு ரயில் இயக்க வேண்டும் என பல வருடங்களாக நாங்கள் கோரிக்கை விடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து பரிந்துரைத்தும் தென்னக ரயில்வே மக்கள் நலனுக்கான இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

அனைத்து மக்களையும் கவனத்தில் கொண்டு தென்னக ரயில்வே அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சிக்கு ஒரு ரயிலையும், அதேபோல் இரவு 7.30க்கு திருச்சியிலிருந்து திருவாரூர் நகருக்கு ஒரு ரயிலும் இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் பலன் பெறுவதோடு ரயில்வே துறையினருக்கும் வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்