SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரணியில் ₹31.62 லட்சத்தில் கட்டப்பட்டது பயன்பாடின்றி பாழடைந்து வரும் காவலர் குடியிருப்புகள்

2019-10-10@ 13:21:46

*வரிப்பணம் வீணடிப்பு என மக்கள் வேதனை

ஆரணி : ஆரணியில் ₹31.62 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாடின்றி பாழடைந்து வரும் காவலர் குடியிருப்பால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆரணி கோட்டை வீதி கைலாசநாதர் கோயில் பின்புறம், அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது.  இங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்குவதற்கான காவலர் குடியிருப்பு ₹31.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு காவல் நிலையம் அருகில்  இன்ஸ்பெக்டர், சப்-இஸ்ன்பெக்டர்களுக்கு 2 காவலர் குடியிருப்பு கட்டிடம்  கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், 2 ஆண்டுகளாகியும் அந்த குடியிருப்பில் காவலர்கள் யாரும் தங்காமல், அவர்களது சொந்த வீட்டிலும், வாடகை வீட்டிலும் தங்கி வருவதால், காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் பாழடைந்து, முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. ஆனால், புதிதாக காவலர் குடியிருப்பு  கட்டி திறப்பு விழா செய்த நாளில் இருந்து இதுநாள் வரை கட்டிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இரவு நேரங்களில் பெண்கள் புகார் அளிக்க வந்தால் இன்ஸ்பெக்டர் இல்லை, நாளை காலை வந்து பாருங்கள் என காவலர்கள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் புகார் அளிக்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு பல லட்சம் மதிப்பில் குடியிருப்பு கட்டி கொடுத்தும், அதனை பயன்படுத்தாமல் பாழடைந்து வருகிறது. இதனால் வரிப்பணம் வீணாகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை போலீசார் புகார்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், `காவலர் குடியிருப்பில் எந்த வசதிகளும் முறையாக செய்யவில்லை. அறைகளில் கட்டிட வேலைகள் அரை குறையாக முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தி விட்டனர். தண்ணீர் வசதி இல்லை. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தரமற்ற கட்டிடத்தில் எவ்வாறு தங்குவது. எனவே, தான் தனியார் விடுதியிலும், வீடு வாடகை எடுத்தும் தங்கி வருகிறோம்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்