SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழாக்கால ஆன்லைன் விற்பனை அபார உயர்வு

2019-10-10@ 01:01:25

புதுடெல்லி: விழாக்கால விற்பனை திருவிழாவில் ஆன்லைன் நிறுவனங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.  தசரா,  தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை சீசன் வருவதை கருத்தில் கொண்டு அமேசான்  உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் 5 முதல் 6 நாட்கள் அதிரடி தள்ளுபடி விற்பனையை  அறிவித்தன. விழாக்கால  சிறப்பு சலுகை, எக்ஸ்சேஞ்ச் ஆபர்களால் விற்பனை அமோகமாக இருந்தது.

இதன் விற்பனை நிலவரம் குறித்து ஆய்வு நடத்திய ஒரு நிறுவனம், 300  கோடி (சுமார் 21,300 கோடி) டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 30 சதவீதம் அதிகம். ஆன்லைன்  விற்பனையில் 45 சதவீத சந்தை பங்களிப்புடன் அமேசான் முதலிடத்தில் உள்ளது.  அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்பனை கடந்த ஆண்டை விட 30 சதவீதம்  உயர்ந்துள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்