SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

75 சதவீத திருப்பணிகள் முடிந்து விட்டது தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் எப்போது?

2019-10-09@ 21:23:30

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயில்  75 சதவீதத்திற்கு மேல் திருப்பணிகள் முடிந்து விட்ட நிலையில்  பெரிய கோயில் கும்பாபிஷேக தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.தஞ்சை பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. கோயில் பிரகாரத்தில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன்,  தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி என பல்வேறு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு  கோயிலில் திருப்பணிகள் நடந்த வருகிறது.

முதல் கட்டமாக கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது. கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டது. அந்த பகுதியில் இருந்த சிவலிங்கங்களை  யாரும் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகள் மற்றும் கதவுகள் சீரமைக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் ஆங்காங்கே கருங்கற்கள் தளம் பதிக்கும் பணி நடைபெற்றது.  விமான கோபுரத்தின் தென்பகுதியில் சேதமடைந்த செங்கல்தளம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல விமான கோபுரத்தின் வடக்கு பகுதியிலும் சேதமடைந்த தரைதளம் சீரமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தற்போது பெருவுடையார் சன்னதி உள்ள விமான கோபுரம் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக பெரியநாயகி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன்  சன்னதியில் உள்ள கோபுரங்கள் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக முருகன் சன்னதியில் சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளாந்தகன் கோபுரத்தில் இருந்து ராஜராஜன்கோபுரம் வரையில் நடை  பாதையில் கருங்கற்கள் தளத்தை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சன்னதிகளில் கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சுதைவேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் 2 மாதங்களில் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது.  திருப்பணிகள் 75 சதவீதத்திற்கு மேல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதி எப்போது  அறிவிக்கப்படும் என்பதை அறிய தஞ்சை மக்கள் ஆவலுடன்  காத்திருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்