SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

90 சதவீத நாடுகள் பொருளாதார மந்தநிலையை சந்திக்கும், இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்: சர்வதேச பண நிதியம் எச்சரிக்கை

2019-10-09@ 11:58:02

வாஷிங்டன்: இந்த ஆண்டில் 90 சதவீத நாடுகள், பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள சர்வதேச பண நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குநரான கிறிஸ்டலினா ஜியார்ஜிவா உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், உலகப் பொருளாதாரமானது ஒருங்கிணைந்த மந்தநிலையைச் சந்தித்து வருவதாகக் கூறினார். பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் இதற்குக் காரணம் என கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்தார்.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போவதாகவும் அவர் கணித்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ச்சி கண்ட நாடுகளில், பொருளாதார நிலை இயல்பாக இருக்கும் என்றும், பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை இந்த ஆண்டில் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் படிப்படியாக குறையும் என்று கிறிஸ்டலினா ஜியாஜிவா கணித்துள்ளார். பொருளாதார மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தக திறனைப் பெருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்