SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடு வேண்டுமா வெறும் 77 ரூபாய் தான்!!

2019-10-09@ 11:25:44

நன்றி குங்குமம் முத்தாரம்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கனவு தனக்காக ஒரு சொந்த வீடு. அதுவும் அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற வளர்ந்த  நாடுகளில் வீடு வாங்கி அந்த நாட்டின் குடிமகனாக குடியேற வேண்டும் என்பது பலரது கனவு மட்டு மல்ல; வாழ்வின் லட்சியம் கூட.  இந்நிலையில்  இத்தாலியின் சிசிலியில் உள்ளது சம்பூகா என்ற சிற்றூர். மிகவும் அழகான் ஊர் இது.

இருந்தாலும் அந்த ஊரில் பல வருடங்களாக வசித்துவந்த பூர்வகுடிகள் வீட்டை காலி செய்துவிட்டு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் குடியேறி  விட்டனர். அதனால் அந்த ஊரில் மக்கள் தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டுவிட்டது. ஆளில்லாமல், சரியாக கவனிக்கப் படாததால் பல வீடுகள்  இடியும் நிலையில் உள்ளன. வீட்டை விட்டுச் சென்ற வர்கள் இப்போது வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கக்கூட வருவதில்லை. ஊரின் பாதிப்பகுதி  பாழடைந்த இடமாக மாறிவிட்டது.

ஊரையும் வீட்டையும் காப்பாற்றவும், மக்கள் தொகையை அதிகப் படுத்தவும் இத்தாலி அரசு அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தது. ஆம்;  சம்பூகாவில் உள்ள ஒரு வீட்டின் விலைவெறும் ஒரு யூரோ மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் 77 ரூபாய். வீட்டை வாங்கியவர்கள்தான் புதுப்பிக்க  வேண்டும். எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்ற கலைஞர் கள்தான் இந்த வீட்டை வாங்குவதில்பெரிய அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அவர்களுக்குப் பிடித்த இட மாகவும் இது இருக்கிறதாம். தவிர, இங்கு வீட்டை வாங்குபவர்களில் பெரும்பாலானவர் கள் வெளிநாட்டினவர் என்பது  ஹைலைட். ‘‘இன்னும் ஆறு மாதங்களில் மனிதர்கள் யாருமற்ற சம்பூகா வீடுகள் எல்லாம் குடும்பங்களால் நிறைந்திருக்கும்...’’ என்கிறார்சம்பூகாவின் மேயர் லியோ னார்டோ.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்