SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீரின் மேற்பரப்பில் மட்டுமே பறக்கக்கூடிய பறக்கும் டாக்சி

2019-10-09@ 11:22:51

நன்றி குங்குமம் முத்தாரம்

கடந்த நூறு வருடங்களில் மனிதன் அடைந்த வளர்ச்சி அபரிமிதமானது. போக்குவரத்து, தொழில், டெக்னாலஜி உட்பட அனைத்துத் துறைகளிலும்  அவனது வளர்ச்சி பெரும் உயரத்தைத் தொட்டுவிட்டன. குறிப்பாக போக்கு வரத்தில் பெரும் பாய்ச்சலே நிகழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் காரில் போக  நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும். ‘ஓலா’, ‘ஊபர்’ வந்த பிறகு ஆட்டோவுக்கு கொடுக்கும் கட்டணத்திலேயே சொகுசு காரில் பவனிவருகிறோம்.

தவிர,விதவித மான வாகனங்கள் சாலைகளை நிறைக்கின்றன. விமானம் வந்த பிறகு ஒரு கண்டத் தை விட்டு இன் னொரு கண்டத்துக்குப் போவது  கூட மிக எளிமையாகிவிட்டது. போக்குவரத்துத் துறையில் நிகழ்ந்த அசுர வளர்ச்சி காற்று மாசுபாடு, அதிக இரைச்சல், வாகன நெரிசல், விபத்துகள்  என பல எதிர்மறைகளைக் கொண்டிருந்தாலும் மனிதனின் பயணத்தை ரொம்பவே சுலபமாக்கிவிட்டது. இருந்தாலும் இதிலுள்ள குறைகளை நீக்கி  அப்டேட் செய்ய நிறைய நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன. அவற்றில் ஒரு முயற்சியைப் பார்ப்போம்.

இரைச்சல் எழுப்பாத, காற்று மாசுபாட்டை உண்டாக்காத, போக்குவரத்து நெருக்கடியிலிருந்து தப்பித்துச் செல்ல என பல நோக்கங்களை முன்வைத்து  பிரான்ஸைச் சேர்ந்த ‘சீ பப்பிள்ஸ்’ என்ற நிறுவனம் பறக்கும் டாக்சியை உருவாக்கியுள்ளது. மின்சாரத்தால் இயங்கும் இந்த டாக்சி தண்ணீரின் மேற்பரப்பில் மட்டுமே பறக்கக்கூடியது. இதை தண்ணீர் டாக்சி என்று சொல்வதே சரியாக இருக்கும்.

மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது இந்த டாக்சி. இதன் சோதனை ஓட்டம் பாரிஸ் நகரில் வெற்றிகரமாக அரங்கேறி யது. இதில் நான்கு  பேர் பயணிக்க முடியும். ஒரு துளி சத்தம் கூட எழுப்பாது. கார் பன் புகையையும் வெளியேற்றாது. இதற்கு தனியாக சாலை போட வேண்டியதில்லை.  தவிர, இந்த வாகனம் மற்ற வாகனங்களுடன் சேர்ந்து சாலையில் செல்லாது.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. டாக்சிக்குக் கொடுக்கும் கட்டணமே இதற்கு வசூலிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அடுத்த வருடத் துக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு பறக்கும் டாக்சி வந்துவிடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்