SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு கிலோ வெங்காயம் ரூ.22க்கு விற்பனை: மத்திய அரசு விற்கும் வெங்காயத்தை வாங்க அலைமோதும் கூட்டம்..!

2019-09-24@ 15:07:43

டெல்லி: டெல்லியில் மத்திய அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.22-க்கு விற்கப்படுவதால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமாக வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் அதிகப்படியாக மகாராஷ்டிராவில் இருந்துதான் வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மற்ற மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்புவது என்பது மிகவும் குறைந்துள்ளது. வெங்காயம் வரத்து குறைவால் அதன் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் 30க்கு விற்கப்பட்டது, தற்போது ரூ20 அதிகரித்து ஒரு கிலோ 50க்கு விற்கப்படுகிறது.

சில்லரை விலையில் கிலோ 70க்கு விற்கப்படுகிறது. தற்போது வரும் வரத்து இன்னும் குறைந்தால் மொத்த மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ 70 வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுவே சில்லரை விலையில் 100 வரை விற்க வாய்ப்புள்ளது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறது. மத்திய அரசின் தொகுப்பில் இருந்த 56 ஆயிரம் டன் வெங்காயத்தில் 16 ஆயிரம் டன் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘நாஃபெட்’ கூட்டுறவு அங்காடிகள் மூலம் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து அனுப்பப்படும் வெங்காயம் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பிறபகுதிகளில் ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் அளிக்கப்படுகிறது.

இதற்காக தினந்தோறும் சுமார் 2 டன் வெங்காயம் மத்திய தொகுப்பில் இருந்து டெல்லிக்கு அளிக்கப்படுகிறது. உள்ளூர் சந்தை விலை 70-80 ரூபாயாக உள்ள நிலையில் ‘நாஃபெட்’ கூட்டுறவு அங்காடி வாகனங்கள் டெல்லியின் முக்கிய சாலைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.22-க்கு விற்பனை செய்வதால் வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்