SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக வலைதள கணக்கு-ஆதார் இணைக்கக் கோரிய வழக்கு: வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

2019-09-24@ 14:43:00

டெல்லி: சமூக வலைதள கணக்குகளை வரைமுறைப்படுத்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் மூலமாக போலிச்  செய்திகள், ஆபாச தகவல்கள் மற்றும் படங்கள், தீவிரவாத தகவல்கள் போன்றவை பரப்பப்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கிரிமினல் வழக்குகளில், சர்ச்சைக்குரிய தகவல்களை யார் அனுப்பியது என்ற விவரத்தை தெரிவிக்கும்படி  சமூக இணையதள நிறுவனங்களிடம், போலீசார் கேட்கின்றனர்.  ஆனால், தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த விபரங்களை சமூக இணையதள நிறுவனங்கள் வழங்குவது இல்லை..

இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சமூக இணையதளங்களுடன் அவற்றை பயன்படுத்துவோரின் ஆதார் எண்களை இணைக்கக் கோரி தமிழகம் உட்பட பல மாநில அரசுகள், சமூக இணையதள நிறுவனங்கள் மீது உயர் நீதிமன்றங்களில்  வழக்கு தொடுத்துள்ளன. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவற்றை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி பேஸ்புக் நிறுவனம் மனு செய்தது. அதில், ‘இந்த வழக்குகளில் பல உயர் நீதிமன்றங்கள்  முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கின்றன. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தால் நன்றாக இருக்கும்,’ என கூறியிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் கடந்த 13-ம் தேதி விசாரித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா வாதிடுகையில், ‘‘உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை  உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுவதில் ஆட்சேபனை இல்லை,’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவெடுப்பதா அல்லது உயர் நீதிமன்றங்கள் முடிவெடுப்பதா என இப்போது எங்களுக்கு  தெரியவில்லை. ஆனால், சமூக இணையதள கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தது.  

இந்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தற்போது சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல்கள் அவதூறு பரப்புவது மிகச்சாதாரணமாக நடைபெறுகிறது. சமூக வலைதளங்கள் நாளுக்கு  நாள் ஆபத்தானவையாக மாறி வருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. சமூக வலைதளத்தை கண்காணிப்பதால் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது என்றால், தனிநபர் தாக்குதலுக்கு ஆளாகும் நபருக்கு என்ன  நிவாரணம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் வழக்குகளை மாற்றுவதா இல்லையா என்பதை விசாரிக்க உள்ளோம் என்றனர்.

மேலும், சமூக வலைத்தள கணக்குகளை முறைப்படுத்த மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை விதிக்கவேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை 3 வாரத்திற்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல்  செய்யவேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் தனிமனித சுதந்திரத்தை மீறும் விதமாக இருக்கிறதா என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்