SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க மத்திய அரசு நிதி உதவி: அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை

2019-09-24@ 14:33:48

டெல்லி: கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கவும் உலகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்கவும் மத்திய அரசு நிதி உதவி அளிக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நேற்று மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் புக்ரியால் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பட்டேல் ஆகியோரை சந்தித்த அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்திற்கு வெளியே 1 கோடியே 25லட்சம் தமிழர்களும் இந்தியாவிற்கு வெளியே 1 கோடியே 50லட்சம் தமிழர்களும் வசிப்பதாக கூறினார். அவர்களின் அடுத்த தலைமுறையினர் தமிழ் பேச தடுமாறுவதாக கூறிய அவர், எனவே உலகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். தமிழ் வளர் மையம் முதன்முதலாக பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்டதாகவும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், மத்திய அரசு நிதி உதவி செய்தால் ஓராண்டுக்குள் 1000 இடங்களில் தமிழ் வளர் மையம் தொடங்கிவிட முடியும் என்கிறார்.

தமிழகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் இருந்தது கீழடியில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு முன் கண்டறியப்பட்ட ஹரப்பா, மோகன்ஜிதாரோ போன்றவை இந்தியாவில் இல்லை என்றும் தற்போது இந்தியாவில் உள்ள நகர நாகரிக சான்று கீழடி மட்டுமே என்று குறிப்பிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்