SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவை...சென்னை புறநகர் மின்சார ரயில் பாதைகளிலும் அறிமுகப்படுத்த திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

2019-09-24@ 12:59:07

புதுடெல்லி: இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள புறநகர் மின்சார ரயில் பாதைகளிலும், தனியார் ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டமும் விரிவாக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கோரப்படவுள்ளது. அதன்படி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை, சென்னை - மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக டெல்லி, லக்னோ இடையே தனியார் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனியார் ஒத்துழைப்புடன் இயக்கப்படும் டெல்லி, லக்னோ இடையிலான தேஜாஸ் ரயில் அக்டோபர் 5ம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, லக்னோ தேஜாஸ் ரயில் செவ்வாய் கிழமை தவிர ஏனைய 6 நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து மதியம் 3.35க்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோ சென்றடையும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 6ம் தேதி காலை 6 மணிக்கு லக்னோவில் இருந்து புறப்பட்டு மதியம் 12.25க்கு டெல்லி வந்தடையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆனது ஒரு ஏசி எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் ஒன்பது ஏசி சேர் கார் பெட்டிகளை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் 4 தேதி உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த தனியார் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, மும்பை-ஆமதாபாத் இடையே தனியார்  ரயில் டிசம்பரில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் தனியார் ரயில்களை இயக்குவது குறித்தும் ஐ.ஆர்.சி.டி.சி. ஆய்வு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள புறநகர் மின்சார ரயில் பாதைகளிலும் தனியார் ரயில் சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்