SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிமினல் வழக்கு பிரிவு 102ன் கீழ், அசையா சொத்துகளை காவல்துறை பறிமுதல் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2019-09-24@ 12:48:15

டெல்லி: காவல்துறையினர் எந்த ஒரு அசையா சொத்துகளையும் கைப்பற்றவோ, பறிமுதல் செய்யவோ அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிரிமினல் வழக்குகளில் பிரிவு 102ன் கீழ், முக்கிய கிரிமினல் வழக்குகளில்  அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின் பிரிவை பயன்படுத்தி அதிக இடங்களில் காவல்துறையினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மகாராஷ்ரா  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த மகாராஷ்ரா உயர்நீதிமன்றம், இதுபோன்று அதிகமாக புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. எனவே, கிரிமினல் வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யும் பச்சத்தில், அவர்களின் அசையா சொத்துகளை தாங்களாக பறிமுதல்  செய்யக்கூடாது என அதிடிர தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்ரா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மகாராஷ்ரா உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுகொண்டுள்ளது. மேலும், கிரிமினல் வழக்குகளில் பிரிவு 102ன் கீழ், முக்கிய கிரிமினல் வழக்குகளில் அசையா சொத்துகளை காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அல்லது வேறு எதும்  காரணத்திற்காகவோ பறிமுதல் செய்யக்கூடாது. முறையாக நீதமன்ற உத்தரவுக்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்