SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் சோனியா மன்மோகன் சிங் சந்திப்பு : கவலை வேண்டாம் என ஆறுதல்

2019-09-24@ 00:34:24

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் வரும் 3ம் தேதி பிற்பகல் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த நிலையில் திகார் சிறையில் இருக்கும் அவரை சந்திக்க கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாசினிக் உள்பட பலர் கடந்த வாரம் சென்றனர். ஆனால் ப.சிதம்பரம் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறியதோடு குறிப்பிட்ட ஐந்து பெயரை மட்டும் அனுமதிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து விட்டார். இதனால் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை சந்திக்க முடியாத நிலை தற்போது வரை உள்ளது. இதில் கட்சி தலைமை மீது ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி தான் காரணம் என தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் ப.சிதம்பரத்தை பார்க்க காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று காலை திகார் சிறைக்கு சென்றனர். இவர்களுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதில் நேற்று காலை சுமார் 9 மணிக்கு உள்ளே சென்ற அவர்கள் இருபது நிமிட சந்திப்புக்கு பிறகு வெளியே வந்தனர். இந்த சந்திப்பின் போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது,‘‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரும் திகார் சிறையில் இருக்கும் எனது தந்தை ப.சிதம்பரத்தை சந்தித்தார்கள். அப்போது, சோனியா காந்தி அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறினார். அதில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்பது அரசியல் சூழ்ச்சியின் காரணமாக தொடரப்பட்டது.

விரைவில் இதிலிருந்து மீண்டு வருவீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும் நானும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார். இதேப்போல் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதார பின்னடைவு குறித்து எனது தந்தையான ப.சிதம்பரத்திடம் ஆலோசனை மேற்கொண்டார் என கார்த்தி சிதம்பரம் கூறினார். அப்போது முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன், கோவை இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரத்தீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்