SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலைக்காக கொடுத்த 3 லட்சம் கேட்டு தொல்லை செய்ததால் பஞ்சாமிர்தத்தில் விஷம் கலந்து கொடுத்து வாலிபர் படுகொலை

2019-09-24@ 00:23:28

*  மனைவி உயிர் ஊசல் * மர்ம நபருக்கு வலை

சென்னை: வேலைக்காக கொடுத்த 3லட்சத்தை திரும்ப கேட்டு தொல்லை செய்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர், பஞ்சாமிர்தத்தில் விஷம் கலந்துகொடு த்ததில் வாலிபர் பலியானார். அவரது மனைவி உயிர் ஊசலாடுகிறது.சென்னை காசிமேடு எஸ்என் செட்டி 3வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவரது மனைவி சரண்யா (26).  அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு நபர் கார்த்திக்கிடம் இருந்து ₹3 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கித்  தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து, அந்த நபரிடம் அடிக்கடி வேலை பற்றி கேட்டுள்ளார் கார்த்திக். நேற்று மாலை வியாசர்பாடி முல்லை நகர் பகுதிக்கு வந்தால்  வேலைக்கான ஆர்டர் தருகிறேன் என்று  கார்த்திக்கிடம் அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பி கணவன், மனைவி இருவரும் வியாசர்பாடி முல்லை நகர் பகுதிக்கு  சென்றுள்ளனர். அங்கிருந்த மர்ம நபர், சாய்பாபா கோயில் பிரசாதம் எனக்கூறி பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளார். அதை  சாப்பிட்டதும் கார்த்திக் மயக்கமடைந்துள்ளார்.

 உடனே, மனைவியை சாப்பிட வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனால் சரண்யாவும் அதை சாப்பிட்டுள்ளார். இதனால் அவரும் மயங்கி விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த 2 பேரையும்  அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தனர். பரிசோதனையில் கார்த்திக் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று  வருகிறார். இதுதொடர்பாக, எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, கார்த்திக் இறந்ததை கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்  செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்