SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகப்பேர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு?

2019-09-24@ 00:23:27

சென்னை: முகப்பேர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ெடங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு  நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசுத் தரப்பில் குறைத்து காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களுக்கு வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என்று இறப்பு சான்றிதழ் தருகின்றனர். தமிழக அரசு, மத்திய அரசுக்கு டெங்கு இறப்பு என்று தரும் பட்டியலையே தேசிய பரவும் தன்மை  கொண்ட நோய் பாதிப்புகள் பட்டியலில் பதிவேற்றம் செய்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கொசுக்களின் பெருக்கத்தால் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் வகை கொசு, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் அரசு,  தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு என தனியே தடுப்பு மருந்து இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நிலவேம்பு குடிநீர் வழங்குதல், உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் மூலம் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.  இந்நிலையில் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளை காய்ச்சலுக்கு தனி வார்டுகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் டெங்கு காய்ச்சலை தடுக்க எந்தவிதமான முயற்சிகளை எடுத்ததாக தெரியவில்லை.இந்நிலையில், சென்னை, முகப்பேர் கிழக்கு, பாடி குப்பம், வண்ணடியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், கவிதா என்ற தம்பதியினருக்கு மகாலட்சுமி (6) என்ற பெண் குழந்தையும், தினேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மகாலட்சுமி என்ற பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து போய் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இரவு 7.30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி மகாலட்சுமிக்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை அறிந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமி மகாலட்சுமி மாலை 4.30 மணியளவில் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவருடைய தம்பி தினேசுக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து மருத்துவ மனை தரப்பில் கூறு கையில், அந்த சிறுமி முதலில் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் நிமோனி யாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்