SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் டிராவல்ஸ் நிறுவனம் 75 பேரிடம் 3 கோடி மோசடி

2019-09-24@ 00:23:24

கோவை: கோவையில் டிராவல்ஸ் நடத்தி 75 பேரிடம் 3 கோடி வாங்கிவிட்டு தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கோவையில் இருந்து கோவா, ஷீரடி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சுற்றுலா  பயணிகளை அழைத்து செல்வதாக அறிவித்திருந்தார். இதை நம்பி கோவையை சேர்ந்த 75க்கும் மேற்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு செல்ல 3 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்திருந்தனர்.

 வெளி மாநிலங்களுக்கு தனி வாகனத்தில் அழைத்து செல்வோம், ஓட்டலில் தங்கும் செலவு, உணவு மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட ேதவையான செலவுகளை ஏற்பதாக சுரேஷ் தெரிவித்திருந்தார். பணத்தை வாங்கிய சுரேஷ்,  சமீபத்தில் தனது நிறுவனத்தை மூடி விட்டு மாயமாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து புகார் அளித்தனர். இது ெதாடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர  குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்