SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேக்கேஜ் டெண்டருக்கு எதிர்ப்பு போலீஸ் பாதுகாப்புடன் டெண்டர் திறக்க முடிவு: பொதுப்பணித்துறையில் பரபரப்பு

2019-09-24@ 00:23:23

சென்னை: பேக்கேஜ் டெண்டருக்கு சிறிய ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான டெண்டர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 7.65 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 9 பணிக்கு 1.85 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 10 பணிக்கு 1.78 கோடி, ஆரணியாறு கோட்ட வடிலத்தில் 10 பணிக்கு 1.76 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக  திட்டகோட்டத்தில் 6 பணிக்கு 24 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 6 பணிக்கு 47 லட்சம், சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 10 பணிக்கு 1.55 கோடி என மொத்தம் 51 பணிக்கு ₹7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த முறை போன்று அல்லாமல் இந்த முறை பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் விடப்படவுள்ளது. இதற்காக, அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய் பணிகளை ஒன்றாக இணைத்து டெண்டர் விடப்பட்டது. இதில் பெரிய ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது. அதே நேரத்தில் சிறிய ஒப்பந்ததாரர்கள் கலந்து  கொள்ள முடியாத நிலையில் டெண்டர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பேக்கேஜ் டெண்டர் விடுவது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் டெண்டர் திறந்து, ஒப்பந்த  நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. அப்போது சிறிய ஒப்பந்ததாரர்கள் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதையடுத்து சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பாலாறு வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் டெண்டர் திறக்க கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் திட்டமிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்