SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலை மிரட்டல் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மக்களவை உரிமைக்குழுவில் புகார்: மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி

2019-09-24@ 00:23:17

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தரக்குறைவான பேச்சு மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக மக்களவை உரிமைக்குழுவிடம் புகார் செய்ய உள்ளதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில்  மிருகங்களின் பெயரையெல்லாம் குறிப்பிட்டு பேசினார்.
இது குறித்து விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்பி மாணிக்கம்தாகூர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவுடன், அமெரிக்கா, துபாய், பிரிட்டன் நாடுகளுக்கு சென்று திரும்பிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தொழில்கள் நிறைந்த விருதுநகர் மாவட்டத்திற்கு எவ்வளவு மூலதனம் கொண்டு வந்து  இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமெரிக்காவில் அவர் எதை சாப்பிட்டாரோ தெரியவில்லை. நிதானத்தை இழந்து ராகுல்காந்தி, எதிர்க்கட்சியினர் மற்றும் என்னையும் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்திற்கு எதையும் செய்யாத அமைச்சர், சிவகாசி தொகுதியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறார். சிவகாசி தொகுதிக்கு அவர் செய்யும் துரோகத்தை, சிவகாசி தொகுதியில் கூட்டணி கட்சிகள் துணையோடு வீடு,  வீடாக எடுத்து சொல்ல இருக்கிறோம். அமைச்சர்கள் உதயகுமார், மாபா பாண்டியராஜன் இருவரையும் மாவட்டத்தில் இருந்து விரட்டுவதற்கு, மன்னார்குடியில் யார் காலில் விழுந்து தொகுதி மாற வைத்தார் என்பதை கூற முடியும். என் மீது அமைச்சரின் தரக்குறைவான பேச்சு, கொலை மிரட்டல் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மக்களவை  உரிமைக்குழுவிடம் புகார் செய்ய இருக்கிறேன்.  மேலும், பிரதமரின் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மிகப்பெரிய அளவில்  கமிஷன் பெறுவது மற்றும் தவறு நடப்பது தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரி பிரதமர் மோடியிடம் புகார் செய்ய இருக்கிறோம். அமைச்சரின் தரக்குறைவான பேச்சு பற்றி மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாத்தூர் காவல் நிலையம், எஸ்பி,  டிஜிபியிடம் புகார் செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்