SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செய்ய வேண்டியதையெல்லாம் பா.ஜ செய்துவிட்டது வெறும் சம்பிரதாயத்துக்காக தேர்தல் நடத்தப்படுகிறது: சிவசேனா கடும் தாக்கு

2019-09-24@ 00:23:13

மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் பாஜ.வினர் ஏற்கனவே செய்து முடித்துவிட்டது என்று சிவசேனா கடுமையாக தாக்குதல் தொடுத்துள்ளது.மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தேர்தலுக்கு பிறகு முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் மீண்டும் பாஜ  ஆட்சியமைக்கும் என்று உறுதிபட கூறினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை முன்வைத்து மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை பாஜ சந்திக்கும் என்றும் கூறிய அமித்ஷா,  சிவசேனாவுடனான கூட்டணி பற்றியோ அல்லது சிவசேனா பற்றியோ ஒருவார்த்தை கூட குறிப்பிடவில்லை.

அமித்ஷா தனது மும்பை பயணத்தின்போது உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசுவார் என்றும் இந்த சந்திப்பில் இருகட்சிகளிடையே தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. சிவசேனாவினரும் அவ்வாறுதான்  எதிர்பார்த்தனர். ஆனால், அமித் ஷாவோ உத்தவ் தாக்கரேயை சந்திக்காமலேயே டெல்லி சென்று விட்டார். இது சிவசேனாவை கடும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த நிலையில், கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் பா.ஜனதாவையும் அமித் ஷாவையும் சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தேவேந்திர பட்நவிஸ்தான் மீண்டும் முதல்வர் என்பதை அமித்ஷா ஏற்கனவே முடிவு செய்து அறிவித்துவிட்டார். அடுத்து ஆட்சியமைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அவர்கள்  செய்து முடித்து விட்டார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. காங்கிரஸ் கட்சி ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளியாகி விட்டது என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்