SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோசடி வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜிவ் குமார் ஆஜராகவில்லை

2019-09-24@ 00:23:10

கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியும் கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் ஆஜராகவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், ரூ.2,500 கோடி மோசடி செய்தது. இந்த வழக்கை கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து,  இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் ராஜிவ் குமார் மோசடி தொடர்பான ஆவணங்களை அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்தும் நிதி நிறுவன மோசடி குறித்தும் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி  வந்தனர்.

இந்நிலையில், ராஜிவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொல்கத்தா உயர்  நீதிமன்றம் சமீபத்தில் விலக்கி கொண்டது. அதில் இருந்து தொடர்ந்து சிபிஐ  விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜிவ்குமார் தப்பி வருகிறார். நேற்று சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ராஜிவ்குமார் நேற்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ராஜிவ்குமார் விசாரணைக்கு ஆஜராக  காலஅவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் பார்க் தெருவில் அமைந்துள்ள அவரது அலுவலக குடியிருப்பு பகுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கும் அவர் இல்லை.  தொடர்ந்து அவரை கண்டுபிடிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்