SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜூசில் மயக்க மருந்து கலந்து மாணவி பாலியல் பலாத்காரம்: நிர்வாண படம் எடுத்து மதம் மாற மிரட்டியதால் பரபரப்பு

2019-09-24@ 00:23:09

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 18 வயது மகள் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். அங்குள்ள கோச்சிங் சென்டரில் டியூசனுக்கு  சென்றபோது கோழிக்கோடு நடுவண்ணூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஜாசிம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவியை ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காரில் லாட்ஜுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அறையில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை  நிர்வாண படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை காண்பித்து மாணவியை மதம் மாறுமாறு கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஷாஜி கோழிக்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல என கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு ஷாஜி புகார்  மனு அனுப்பினார். இதன்படி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய உளவு அமைப்பு (ஐபி) விசாரணையை தொடங்கியது.  நேற்று முன்தினம் மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவியை பலாத்காரம் செய்த முகமது ஜாசிம் இதுபோல் மேலும் பலரை பலாத்காரம் செய்து கட்டாய மதமாற்றம் செய்திருக்கலாம் என உளவுத்துறை கருதுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்